உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கையிருப்புடன் கணேமுல்ல பகுதியில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 9 கிலோகிராம் 946 கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராம் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒரு உந்துருளி, தராசு மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கே இந்த போதைப்பொருள் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0