உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஜூன் மாதம் வரை எரிபொருள் உண்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

“மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்வடைந்த போதிலும், தற்போது விநியோகக் கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் எதிர்வரும் ஜூன் மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது” என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் பூகோள ரீதியாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் கப்பல்களுக்கான வாடகைக் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் சடுதியாக உயர்ந்தமையே உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்குக் பிரதான காரணங்களாக அமைந்தன.

கடந்த பெப்ரவரி மாதத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருந்த போதிலும், தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வழமைக்கு மாறாக அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தார்கள். இதனால் கேள்வி அதிகரித்ததே தவிர, உண்மையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை. கறுப்புச் சந்தையை ஒழிக்கவே கியூ.ஆர். முறைமை மற்றும் வாகன இலக்கத் தகடுகளின் இரட்டை எண் அடிப்படையில் விநியோகிக்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.

தற்போது எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், எரிபொருள் நிலையங்களில் எவ்வித வரிசைகளும் இல்லை. ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குத் தேவையான எரிபொருள் எம்மிடம் கையிருப்பில் உள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு வரவுள்ளதால், விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

எரிபொருள் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் நுகர்வோருக்குத் தொடர்ச்சியான சேவையை வழங்க அரசு அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0