பேரன் தாக்கியதில் பாட்டி உயிரிழப்பு.!
தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், நேற்று புதன்கிழமை (08) வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தம்புத்தேகம, மல்வானேகம பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் பேரனே இந்த கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.