உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (8) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் முக்கிய குளங்களில் ஒன்றான கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் 10:1 என்ற அடிப்படையில் பயிர்ச்செய்கை நடைபெற்றது. ஆனால், குளத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு, இந்த முறை 13:1 என்ற விகிதாசார அடிப்படையில் நீர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 2,409 ஏக்கர் நிலத்தில் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும்.

வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் பயிர்ச்செய்கை, குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக இந்த முறை ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, ஜூன் மாதத்துக்குள் அறுவடை நிறைவு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு ஹெக்டேர் மானியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையான யூரியா மற்றும் ஏனைய உரங்களை விவசாயிகளுக்கு விரைவாக விநியோகிக்க தேவையான கொள்வனவு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முறை சிறுபோக நிலங்கள் உரிய விவசாயிகளுக்கு மட்டுமே பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களைப் போல பொது அமைப்புகள், கோயில்கள் அல்லது தேவாலயங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பை தவிர்த்து, மேலதிக இடங்களில் சட்டவிரோதமாக பயிர் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே 18 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிகபட்ச தண்டப்பணம் விதிக்கப்படுவதோடு, விவசாய அமைப்புகளில் இருந்து தடை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீதிமன்றம் செல்லாமல் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளை தீர்த்துக் கொள்ள ‘நியாய சபை’ மாதம் ஒருமுறை மன்னார் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. எதிர்காலத்தில் இதற்கு நிரந்தர நீதிபதி ஒருவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் உரிய காலப்பகுதியில் பயிர்ச் செய்கையை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0