பிள்ளையானை தமிழ் இனத்தின் துரோகி..! அம்பலமாகும் முகாம் கொடுமைகள்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான், தமிழ் இனத்தின் துரோகி என தமிழ் அரசியலில் நீண்டகாலமாக பலரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
ஆயுதப் போராட்ட காலத்தில் அவர் செயற்பட்ட விதம் மற்றும் அவரது முகாம்களில் நடந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி தரும் சித்திரவதைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீதான மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த திடுக்கிடும் உண்மைகள் என சில செய்திகளும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து பிரித்தானியாவில் இருந்து தெய்வேந்திரம் இந்திரதாஸ் ,ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.