கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ; கினிகத்தேன பகுதியில் இரண்டு பாடசாலை மாணவிகள் காயம் அடைந்துள்ளனர் ..!
இச் சம்பவம் ஏப்ரல் 08 ஆம் திகதி இன்று மாலை 4 மணிக்கு கினிகத்தேன பகுதியில் இடம் பெற்று உள்ளது
இது குறித்து கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் இன்று 8 ஆம் திகதி மாலை வேளையில் அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.
இதனால் கினிகத்தேன பேருந்து நிலைய பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் பேருந்து நிலைய பகுதியில் இருந்த கினிகத்தேன கோணவில சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவியும் ,கினிகத்தேன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 11 வயது மாணவியும் படு காயங்களுடன் கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளனர்.
மேலும் இந்த கடும் காற்றினால் கினிக்கத்தேன மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையின் கூரையும் சேதமடைந்துள்ளதாக தெரியப்படுகின்றது .