உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் மீனவர் ஒருவரை குற்றச்சாட்டில் ; கடற்படை புலனாய்வு பிரிவினர் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
குறித்த மீனவரை கைது செய்த கடற்படை, முழங்காலில் இரண்டு மணித்தியாலம் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதாக இன்று ஏப்ரல் 08 ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 05 ஆம் திகதி காலையில் செட்டிபாளையம் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் அனுமதியற்ற மீன்பிடி வலைக்கு பாவிக்கும் ஈயம் துண்டுகளை வைத்து கொண்டிருந்தபோது அங்கு சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமில் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சென்று குறித்த மீனவரை கைது செய்தனர்
இதன்போது மீனவர் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலையை பாவித்து மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.


இந்த நிலையில் குறித்த மீனவரை பிடித்து இரண்டு மணித்தியாலம் முழங்காலில் இருக்க வைத்து அடித்து தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அவரது மனைவி தனது கணவரை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதை செய்வதைக் கண்டு, உடன் அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவை செய்துள்ளார்.


அதனை கண்ட கடற்படை புலனாய்வு பிரிவினர் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை பறித்து அவர் வீடியோ செய்த காட்சிளை அழித்ததுடன் அவருக்கு தகாதவர்த்தைகளால் பேசி அவரை கைது செய்யப் போவதாக மிரட்டி அவரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முழங்காலில் வைத்திருந்த மீனவரை களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்திருந்த பின்னர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் காரியாலய அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.


கடற்படை புலனாய்வு பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் மிகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை முழங்காலில் வைத்திருந்த காட்சியை தனது பிள்ளைகள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்திருந்ததாகவும் அதனால் மிகவும் வேதனையடைந்துள்ளதுடன் அவமானம் ஏற்பட்டுள்ளதுடன் பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நான் மட்டும் இந்த சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கவில்லை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சுருக்குவலையை பாவித்து மீன்பிடித்து வருகின்ற நிலையில் என்னை மட்டும் கைது செய்தது மட்டுமல்ல முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவரை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.
எனவே தன் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டும் சம்மந்தப்பட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0