உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மின்வெட்டால் செங்கலடியில் யானை அட்டகாசம் அதிகரிப்பு – மக்களின் உயிர் அச்சம் குறித்து சபையில் சிறீநேசன் சுட்டிக்காட்டினார்.

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“நாட்டில் நிலவும் மின்வெட்டு காரணமாகக் கிராமப்புறங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக மட்டக்களப்பு, செங்கலடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மின்சாரத் தடையால் கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் கடும் இருள் நிலவுகின்றது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வரும் காட்டு யானைகளின் அட்டகாசம் செங்கலடி போன்ற பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்வதுடன் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சஹ்ரான் காசிம் என்பவர் ஒரு கருவி மட்டுமே. அவரைப் பின்னால் இருந்து இயக்கிய முதலாம் மட்ட சூத்திரதாரிகள் யார் என்பதை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டால் கல்வி, விவசாயம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியிலும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாணவன் திருக்குமரன் (கணிதம்) மற்றும் காத்தான்குடி மாணவன் பர்தான் (வணிகம்) ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளமை பாராட்டுக்குரியது.

விவசாயிகளுக்குத் தேவையான உர மானியம் மற்றும் எரிபொருள் நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன், எரிபொருள் மற்றும் உரத்தைப் பதுக்கி வைத்து இலாபம் ஈட்டும் கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பு, நாவற்குடா உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது இளைய சமூகத்தைச் சீரழிக்கும் இந்தப் போதைப்பொருள் மாபியாவை ஒழிக்கப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0