உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

“அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இலக்கிய விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான ஜெஸ்மி எம்.மூஸா எழுதிய “அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா மருதமுனை கலாசார மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை(13) மாலை 3.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

வாழ்நாள் ஊடக சாதனையாளர் கலாபூஷணம் மர்ஹும் ஏ.எல்.எம்.சலீம் அரங்கில் இடம்பெறவுள்ள இந் நிகழ்விற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் தவிசு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமை தாங்கவுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடாதிபதி எம்.எம்.பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள இந் நிகழ்வின் வெளியீட்டுப் பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளர் எம்.எச்.எம்.தாஜுதீன்(சறோ) பெற்றுக் கொள்ளவுள்ளார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் முன்னிலை அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசை தமிழ் செய்திப்பிரிவின் பிரதானி சீ.பி.எம்.சியாம் ஊடக அதிதியாகக் கலந்து கொண்டு மர்ஹும் ஏ.எல்.எம்.சலீம் நினைவலைகளை முன்வைக்கவுள்ளார். நினைவுப் பிரதியினை சவூதி அரேபியா நீதி அமைச்சின் மென்பொறியியலாளர் சலீம் அக்கீல் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

விழாவின் தொடக்கவுரையினை கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ் மொழிக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் நிகழ்த்தவுள்ளதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் நூல் ஆய்வுரையினை நிகழ்த்துவார்.

அலிஷ் ஊடக, கலை, இலக்கிய, சமூக சேவை வலையமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்வியியலாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எனப் பலரும் கௌரவ – விஷேட அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0