உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிறுத்தைப்புலியின் பற்கள் விற்பனை; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தைப்புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்ணவீர எல். அடசூரியவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ. குணசேகர வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இக் கைது இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையில் அரிதாகக் காணப்படும் சிறுத்தைப்புலி ஒன்றை கொன்று, அதன் நான்கு கால்களையும் வீட்டுவளவில் புதைத்து, பற்களை விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது.

குறித்த புலிப்பற்களை ரூபாய் 110,000க்கு வாங்கிய வர்த்தகர் ஒருவரும், அதற்குத் துணைநின்ற மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0