உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சொகுசு பேருந்துகளில் விசேட சோதனை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சியின் பணிப்புரைக்கமைய மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள் பேருந்துகளை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி நேற்று மாலை (07) நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியை உள்ளடக்கும் வகையில் நானுஓயா நகரில் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பயணிகளிடம் அதிக பணம் வசூலிப்பது, மீதி பணத்தை தராமல் இருப்பது, டிக்கெட் வழங்காதது, அதிக சத்தம் எழுப்பும் வகையில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது, பேருந்தில் உள்ள பல்வேறு அலங்காரங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.

பயணிகளிடம் இருந்து தொடர்ந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்போது நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரை சென்ற சொகுசு பேருந்து ஒன்றில் நடத்துனர் ஒருவர் தலவாக்கலை வரை சென்ற பயணிகளிடம் 300 ரூபாய் பணம் அறவிடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலாக இருந்த பயணிகள் பயணம் செய்ய பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் குளிரூட்டப்படுதல் அவசியம் எனவும் இதன் போது சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டது.

தொடர்ந்து நுவரெலியா – ஹட்டன் சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக பயணிகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.

இதன்படி விதிமீறல் இருந்த அனைத்து பேருந்துகளுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சொகுசு பேருந்துகளில் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இருமடங்கு கட்டணமும் அறவிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்களைப் பேருந்துகளுக்குள் பயணிகளுக்கு காட்சிப்படுத்துமாறும் அவ்வாறு செய்யாத பேருந்துகளின் உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0