உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேசிய அடையாள அட்டைகளை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பைச் சீரமைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (08) முதல் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் அவசரத் தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேசிய அடையாள அட்டை விபரங்களைச் சரிபார்த்தல் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான மாற்று முறைகளை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான பொதுச் சேவைகள் மற்றும் பிற அலுவலகப் பணிகள் மறு அறிவிப்பு வரை செயல்படாது.

கணினி அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டவுடன் அனைத்து சேவைகளும் தடையின்றி மீண்டும் தொடங்கும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0