உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வடக்கு – கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை விடுவிக்க அரசு துரித நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.

இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

காணி விடுவிப்பும் வீதித் திறப்பும்
2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எஞ்சிய காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போது எழுந்துள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விவசாயம்
மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், ‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம்
மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக தற்போதுள்ள காணிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கண்டறியுமாறு அவர் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

படைத்தரப்பு நலன்புரி
பாதுகாப்புப் படையினரின் நலன்புரித் திட்டங்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆலோசனைக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0