உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தரம் குறைந்த நிலக்கரியால் மின் உற்பத்தியில் வீழ்ச்சி! – மேலதிக சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படாது என்று ஜனாதிபதி உறுதி..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைவாக இருந்தமை மின் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், அதனால் ஏற்படும் எவ்வித மேலதிக நுகர்வோர் கட்டணச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்பட மாட்டாது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது, நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் தற்போதைய நிலை குறித்து அவர் வழங்கிய விவரங்கள் வருமாறு


மின் உற்பத்தியில் பாதிப்பு

“நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஒவ்வொரு அலகும் தலா 270 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இருப்பினும், நிலக்கரியின் தரம் காரணமாக இந்த மட்டம் மாறுபடுகின்றது. 900 மெகாவோட் மொத்த கொள்ளளவைக் கொண்ட குறித்த வளாகத்தில், தற்போது சில சந்தர்ப்பங்களில் 810 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகின்றது. இது இயந்திரக் கோளாறோ அல்லது கொள்முதல் முறைகேடோ அல்ல, மாறாக நிலக்கரியின் தரத்தில் உள்ள குறைபாடே காரணமாகும்.

தரப் பரிசோதனையும் கொடுப்பனவுகளும்

நிலக்கரியின் தரம் ஆய்வகப் பரிசோதனைகள் மூலமே உறுதி செய்யப்படுகின்றது. ஆரம்பக் கட்ட சோதனைகளுக்குப் பிறகு 80 சதவீத கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. எஞ்சிய 20 சதவீத கொடுப்பனவுகள், 2023 முதல் பயன்பாட்டில் உள்ள இந்தியாவின் சுயாதீன ஆய்வகத்தின் இறுதிப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே விடுவிக்கப்படுகின்றன. இதுவரை மூன்று நிலக்கரி கப்பல்கள் இந்தப் பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளன.

விநியோகஸ்தர்களுக்கு அபராதம்

தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இறுதி 20 சதவீத கொடுப்பனவு மட்டுமன்றி, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 80 சதவீத கொடுப்பனவிலும் ஒரு பகுதி மீளப் பெறப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மெட்ரிக் தொன் 98 டொலர் என நிர்ணயிக்கப்பட்ட நிலக்கரி கப்பலுக்கு, அபராதங்களின் பின்னர் அதன் விலை 68 டொலராகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குச் சுமை இல்லை

தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் இழப்புகள் அனைத்தும் விநியோகஸ்தர் நிறுவனங்களிடமிருந்தே அறவிடப்படும். அந்தச் சுமை ஒருபோதும் மின்சார நுகர்வோர் மீது சுமத்தப்பட மாட்டாது. தேவைப்படின் இது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0