உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

திடீர் செயலிழப்புகளே தவிர திட்டமிட்ட மின்வெட்டு அல்ல.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“இலங்கையில் தற்போது திட்டமிட்ட மின்வெட்டு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை. மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் திடீர் தொழில்நுட்பக் கோளாறுகளே அவ்வப்போது ஏற்படும் மின் துண்டிப்புகளுக்குக் காரணமாகும்” என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அண்மைக்காலமாக இரண்டு மணித்தியாலங்கள் வரை திடீர் மின்வெட்டு ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது, மக்களிடம் அறிவிக்காமல் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்வது ஏன் என அவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் குமார ஜயக்கொடி,
“தற்போது நிலவும் மின் துண்டிப்புகள் திட்டமிட்டவை அல்ல. மின் விநியோகக் கட்டமைப்பில் அவ்வப்போது ஏற்படும் சில இடையூறுகள் புதிய விடயமல்ல. மின்சாரக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் மின் துண்டிப்புகளை உடனடியாகச் சீர்செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவை திடீர் செயலிழப்புகளே தவிர, திட்டமிட்ட மின்வெட்டு அல்ல.

அரசாங்கம் திட்டமிட்ட மின்வெட்டை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், அது குறித்த அறிவித்தல் முன்கூட்டியே பொதுமக்களுக்கு வழங்கப்படும். தற்போதைய நிலையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சியினர் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான கேள்விகளை எழுப்புகின்றனர்.” – என்று அமைச்சர் சாடினார்.

மின் துறையை வலுப்படுத்துவதற்கும், இவ்வாறான திடீர் மின் துண்டிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி சபையில் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0