சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!
மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக நேற்று சென்ற பாரவூர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சாரதி பாய்ந்து தப்பித்து விட்டாலும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாமிமலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின் அருகில் அமர்ந்து சென்றவர் படுகாயம் அடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளார்.
இந்த வீதி கடந்த முப்பது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
