உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அமைச்சர் லால் காந்தவின் இரட்டை வேடம் தோலுரிப்பு; எவ்வித தொழிலும் இன்றி மாளிகை கட்டியது எப்படி?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“அரசியல்வாதிகள் எளிமையாக வாழ வேண்டும் எனப் போதித்த லால் காந்தவின் சொகுசு வாழ்க்கை, அவரது அரசியல் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த 60 ஆண்டுகளாகத் தூய அரசியல் பேசுவதாகக் கூறிக்கொண்டு திசைக்காட்டி தரப்பினர் முன்னெடுத்த அரசியல் நாடகத்தை, லால் காந்தவின் இந்த மாளிகை ஒரு சில நிமிடங்களில் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வீட்டை ஒரு ‘தேசிய மரபுரிமையாக’ அறிவிக்க வேண்டும் என நான் முன்மொழிகின்றேன். அந்தளவிற்கு இது கொள்கை முரண்பாட்டின் அடையாளமாக உள்ளது.

தற்போதைய நாடாளுமன்றக் குழுவில் அரசியலுக்கு வருவதற்கு முன் உயர் மட்டத் தொழில்களில் ஈடுபட்டு, பல இலட்சம் ரூபாய் ஊதியம் பெற்றவர்கள் பெரிய வீடு கட்டுவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக எவ்விதத் தொழிலும் அல்லது வியாபாரமும் செய்யாமல், முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே இருந்த லால் காந்த போன்ற ஒருவரால் இவ்வளவு பெரிய மாளிகையை எப்படிக் கட்ட முடிந்தது?

தன்னிடம் ஒரு சதம் கூட இல்லை என்று கூறிக்கொண்டு, தன் பிள்ளைக்கு ஒரு புல்லாங்குழல் கூட வாங்கிக் கொடுக்க முடியாத ஏழைத் தந்தையர்களைத் தமது பேச்சால் இவர்கள் ஏமாற்றினார்கள். ஆனால், இன்று அந்த மாளிகையில் பியானோக்கள் வாசிக்கப்படுவது மிகப்பெரிய முரண்பாடாகும். அரசியல்வாதிகள் சொத்து சேர்க்கக் கூடாது எனப் போதித்த இவருக்கு, இவ்வாறான மாளிகையில் வாழ்வதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கின்றது?

இத்தனை காலம் மற்ற அரசியல்வாதிகளின் உடைகள், வாகனங்கள் மற்றும் பிள்ளைகள் குறித்து மிக மோசமாக விமர்சித்தவர்களுக்கு, தற்போது உரிய பதிலடியே கிடைத்துள்ளது. எவ்விதத் தொழிலும் இன்றி முழுநேர அரசியல் செய்துவிட்டு இவ்வளவு சொத்து சேர்த்துள்ள இவர்களின் போலித்தனத்தை இனியாவது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.” – என்றும் சஞ்சீவ எதிரிமான்ன மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0