உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஜே.வி.பியின் சொத்து சமூக மூலதனமாம்; மற்றவர்களுடையது திருட்டுச் சொத்தா?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“அரசாங்கத் தரப்பினரோ அல்லது ஜே.வி.பி. உறுப்பினர்களோ சொத்துக்களைக் கொண்டிருந்தால் அதனை ‘சமூக மூலதனம்’ என நியாயப்படுத்துகின்றனர். ஆனால், மற்றவர்கள் சொத்துக்களைக் கொண்டிருந்தால் அதனைத் திருட்டுச் சொத்து என முத்திரை குத்துகின்றனர்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசியல் போக்குகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகள் குறித்து அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத் தரப்பினர் மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொண்டுள்ள சொத்துக்களுக்குப் புதிய வரைவிலக்கணம் கொடுத்து நியாயப்படுத்தும் போக்கு காணப்படுகின்றது. அதேவேளை, அரச ஊழியர்களோ அல்லது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோ சொத்துக்களைக் கொண்டிருந்தால் அவை உடனடியாகத் திருட்டுச் சொத்துக்கள் என முத்திரை குத்தப்படுகின்றன. இது ஒரு தெளிவான இரட்டை நிலைப்பாடாகும்.

கடந்த காலங்களில் எனக்கு எதிராகப் பரப்பப்பட்ட உகாண்டாவிற்கு 18 பில்லியன் டொலர் கொண்டு சென்றமை, தங்கக் குதிரைகள் மற்றும் லம்போகினி கார்கள் தொடர்பான கதைகள் அனைத்தும் வெறும் பொய்க் குற்றச்சாட்டுகள் என்பது இப்போது நிரூபணமாகி வருகின்றது. எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை, எனது பெயரையும் கௌரவத்தையும் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே நான் கருதுகின்றேன்.

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அரசாங்கம் முறையான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது. கொரோனா போன்ற பாரிய உலகளாவிய நெருக்கடி நிலவிய காலத்தில்கூட எமது அரசாங்கம் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை வழங்கியதை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சர்களும் கடந்த காலங்களில் முக்கிய பதவிகளில் இருந்தபோது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எத்தகைய தேர்தல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக உள்ளதுடன், மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி எமது அரசியல் பயணம் தொடரும்” – என்றும் நாமல் ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0