உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியுடன் சர்வதேச நாணய நிதியக் குழு சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
18 பார்வைகள்

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துனெத்திக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது நாட்டின் கைத்தொழில் துறை கொண்டுள்ள ஆற்றல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக கைத்தொழில் துறை வழங்கி வரும் பங்களிப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தச் செயற்பாடுகளில், கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது வெகுவாகப் பாராட்டினர்.

அத்துடன், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் நிலவும் தடைகளை அகற்றுதல், ஏற்றுமதிச் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பொருத்தமான சூழலை உருவாக்குவது குறித்தும் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இணையாக உள்ளூர் கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் மற்றும் நிதி வசதிகள் தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0