உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முச்சக்கரவண்டிகள் கொள்ளை; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கிரிபத்கொடை, பேலியகொட, வத்தளை மற்றும் களனி ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் முச்சக்கரவண்டி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 61 மற்றும் 75 வயதுடைய, ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, கிரிபத்கொடை பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், அவர் பல பகுதிகளில் முச்சக்கரவண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டது.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், நேற்று 06ஆம் திகதி ஹிங்குராக்கொட பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கொள்ளையிடப்பட்ட 04 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்தமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0