உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அரசுக்கே ஆபத்து.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

“தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையே மின்சாரக் கட்டண அதிகரிப்புக்குக் காரணமாகும். மீண்டும் கட்டணங்களை உயர்த்த அரசு முற்பட்டால், அது தற்போதைய ஆட்சியாளர்களின் இருப்புக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தரமான நிலக்கரி கொண்டு வரப்பட்டிருந்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது. தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய நிறுவனங்களுக்கு எதிராகத் தண்டப்பணம் விதிக்கக் கூடாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுவது வேடிக்கையானது. அவ்வாறு தண்டப்பணம் விதித்தால் அந்நிறுவனங்கள் விநியோகத்தை நிறுத்திவிடும் என அவர் கூறுவது, திருட்டுச் செயலுக்குப் பகிரங்கமாக ஆதரவளிப்பதாகும்.

தவறு செய்த நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க அஞ்சும் அரசின் செயற்பாடு பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. குறித்த நிறுவனங்களுடன் அரசுக்கு ஏதேனும் இரகசிய உடன்பாடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான முறையற்ற நிர்வாகத்தினாலேயே இன்று மக்கள் மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஒரு மின்சாரக் கட்டண அதிகரிப்பை மக்கள் மீது சுமத்த அரசு திட்டமிட்டால், அது அரசுக்கு எதிரான மக்களின் பாரிய எழுச்சிக்கு வழிவகுக்கும். இது அரசின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0