உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

53084ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 1632ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர்..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

வடமாகாணத்தில் 2026 ஆம் ஆண்டு சிறுபோக செய்கையாக 53084ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும்,1632ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.

தற்போதைய வடமாகாணத்தின் குளங்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் வடமாகாணத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 53குளங்களை பராமரித்து வருகின்றோம் அதில் 53குளங்களில் 2026ம் ஆண்டு சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 53084ஏக்கர் நெற்ச்செய்கையும் 1632ஏக்கரில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக கடந்த வருடம் 74வீதமாக காணப்பட்ட பயிர்ச்செய்கையானது 81.5வீதமாக அதிகரித்துள்ளது.

12குளங்களில் 100வீத செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தின் கீழ் இம்முறை 21000ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் செய்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0