உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தமிழரசுக் கட்சியின் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராம மக்களின் அபிவிருத்தித் தேவைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று அவர் நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது முக்கிய அறிவிப்புகளை அவர் விடுத்தார்.

துறைநீலாவணை மீனவர்கள் துறையடிக்குச் செல்லும் வீதியை பிரதேச சபை ஊடாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மீனவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த ஓய்வுபெறும் மண்டபத்தைப் புனரமைப்பதற்காகப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

துறைநீலாவணை வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை அவர் நேரில் கண்டறிந்தார். இது குறித்து பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருடன் உடனடியாகக் கலந்துரையாடி, குறித்த வசதியை விரைவில் பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார்.

கிராமத்தின் விளையாட்டு மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய கலாச்சார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கள விஜயத்தின் போது, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், வட்டார பிரதேச சபை உறுப்பினர் சு.இளமாறன் மற்றும் கிராம மக்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0