உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

எனது கைது சட்டவிரோதமானது; மேன்முறையீட்டு நீதிமன்றில் சுரேஷ் சலே ரிட் மனு தாக்கல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே, தான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், அண்மையில் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனது கைது மற்றும் தடுத்து வைப்பு நடவடிக்கைகள் அடிப்படைச் சட்டக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அருட்தந்தை ரோஹன் சில்வா, சட்டமா அதிபர் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

தன்னைத் தடுத்து வைத்துள்ள உத்தரவை வலுவற்றதாக்குமாறும், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தக் கைது நடவடிக்கையிலிருந்து தனக்கு நிவாரணம் வழங்குமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு எதிர்வரும் நாட்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0