சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக உயர்வு.!
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலன் 775 ரூபாவால் அதிகரித்து 4,765 ரூபாவாக உயர்ந்துள்ளது.
5 கிலோ கொள்கலன் 308 ரூபாவால் அதிகரித்து 1,910 ரூபாவாகவும், 2.3 கிலோ கொள்கலன் 140 ரூபாவால் அதிகரித்து 890 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, லாஃப்ஸ் நிறுவனமும் விலைகளை அதிகரித்துள்ளதுடன், 12.5 கிலோ கொள்கலன் 1,070 ரூபாவால் உயர்ந்து 5,700 ரூபாவாகவும், 5 கிலோ கொள்கலன் 418 ரூபாவால் அதிகரித்து 2,280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.