உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி அரசியலில் ஈடுபடுகின்றன – பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று பௌத்த விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் மிகவும் முதிர்ச்சியற்ற எதிர்க்கட்சிதான் செயல்படுகின்றது என்றும், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.


முன்னதாக ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருந்த கட்சிகள் தற்போது அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கில் ஒன்றிணைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் திட்டங்கள் வெற்றியடைவதால் அவர்களுக்கு அரசியல் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நடத்திய நிகழ்வுகள் உள்ளிட்டவை திட்டமிட்ட அரசியல் நாடகங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் மக்களின் ஆதரவுடன் அவை முறியடிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0