நள்ளிரவு முதல் உச்சத்தை தொடும் சமையல் எரிவாயு விலை..!
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயுக்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இன்று ஏப்ரல் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 4,765 ரூபாயாகும் ,
5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,910 ரூபாயாகும். 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 890 ரூபாவாகும்,
இதேவேளை இன்று ஏப்ரல் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாகும் அதேநேரம் 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,280 ரூபாயாகும்.