உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிறைக்குள்ளும் மோசமான புங்குடுதீவு வித்யா கொ*லை கைதி; துஷ்பிரயோக முயற்சி!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பெண் மருத்துவர் ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்லேகலை தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, சிறைச்சாலை மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது, அவரைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில், குறித்த கைதி திடீரென மருத்துவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாகச் செயற்பட்டு கைதியைக் கட்டுப்படுத்தினர். இதனால் பெண் மருத்துவர் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வித்யா கொலை வழக்கில் ‘குரூப் ரேப்’ குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0