உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கட்டையர்குளத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் தவிசாளர் கலந்துரையாடல்…!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
111 பார்வைகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டினூடாக சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடலொன்று கட்டையர்குளம் கிராமத்தில் ஏப்ரல் 04 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவருமாகிய பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பகுதி மக்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கோரிக்கைகளை கேட்டறிந்த தவிசாளர் எதிர்காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் உடனடியாக கட்டையர்குளம் கிராமத்திற்கு 1 மில்லியன் ரூபாவினை அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்காக ஒதுக்கீடு செய்வதாகவுக் இதன்போது தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சந்திப்பில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பகுதி மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0