உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ.வுட்லர் குறிப்பிட்டார்.

இந்த சோதனைகளின் போது 47,006 லிட்டர் டீசல், 2,668 லிட்டர் பெற்றோல் மற்றும் 2,706 லிட்டர் மண்ணெண்ணெய் உட்பட 52,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தொடர்ந்து நிலவி வரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத எரிபொருள் பதுக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0