உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

பெருமளவியலான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றத்துக்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள், சீனாவின் குன்மிங்கிலிருந்து இன்று ஏப்ரல் 04 ஆம் திகதி அதிகாலை சுமார் 1:10 மணியளவில் இலங்கைக்கு வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்க அதிகாரிகள் அவர்களிடம் முன்னெடுத்த சோதனையில், அவர்களில் பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 24,200 சிகரெட்டுகள் அடங்கிய 121 அட்டைப் பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 3.63 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரு நபர்களும் தற்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் உள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0