மயிரிழையில் பலரின் உயிர் காக்க பட்ட சம்பவம்! நேற்று மாலை தியகல பகுதியில்.
தலைநகர் கொழும்பு பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த அரச பேருந்து ஏப்ரல் 04 நேற்று மாலை வேளையில் கினிகத்தேன தியகலை கடவலை பகுதியில் வைத்து ஹட்டன் பகுதியில் இருந்து கண்டி பகுதிக்கு செல்லும் பாராஊர்தி முன்னாள் வந்ததால் பேருந்து சாலைக்கு அருகில் போடப் பட்டு உள்ள இரும்பு வேலியில் சிக்கி நின்றது.
அவ்வாறு இரும்பு வேலி அமைக்க வில்லை என்றால் பாரிய அளவிலான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கும்.
தெய்வாதீனமாக பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் எவ்விதமான காயங்களும் இன்றி காப்பாற்ற பட்டதாக தியகலை பகுதியில் உள்ள வீதி தடை போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.