கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
கண்டி – கம்பொல – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பல்லேகம பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கம்பொலவிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த உந்துருளி மற்றும் எதிர்திசையில் வந்த டிப்பர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உந்துருளில் சென்ற நபர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.