உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

காசல்ரி நீர்த்தேக்கத்தில் இணையும் கெசல்கமுவ ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் தோட்டத்தைச் சேர்ந்த நோர்வூட் அயர்வி தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய வாகீசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று மதியம் கெசல்கமுவ ஓயாவில் உள்ள ‘சில்வர் வாலா’ என்ற இடத்தில் தனது நண்பர்கள் சிலருடன் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட நண்பர்கள், அவரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அதிக ஆழம் காரணமாக, அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்து, அந்த மாணவர் நீருக்கடியில் மூழ்கியுள்ளார்.

நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், நோர்வூட் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையினை நேற்று முதல் மேற்கொண்டனர்.

எனினும் நீரிழ் மூழ்கிய சிறுவனை மீட்க முடியாத நிலையில் இன்று (05) இராணுவ சுழியோடியினரை வரவழைத்து குறித்த ஆற்றுப்பகுதியில் தேடுதல் நடத்தி சுமார் 02 மணித்தியாலங்களின் பின்னர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவித்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்து முடிந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0