போதை மாத்திரைகளுடன் மூவர் கைது.!
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெட்லண்ட்வத்த பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்களை குருநாகல் விசேட அதிரடி மோட்டார் சைக்கிள் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24, 25 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பொதுஹெர மற்றும் வந்துராகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, 20 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, வந்துராகல பகுதியில் 21,930 போதை மாத்திரைகளுடன் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் விசேட அதிரடி மோட்டார் சைக்கிள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.