கஞ்சாவுடன் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்.!
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவினை கொண்டு சென்ற வேளை இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றையதினம்(4) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.