உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ஆன்மாக்களின் தியாகங்களும் மகத்தானது!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த அந்த நாளைப் போலவே இ எம் மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் நீங்கி, வடக்கு கிழக்கு எமது தாயக மண் விடுதலை பெற வேண்டும்.உயிர்த்த ஞாயிறு அன்று எமது கத்தோலிக்க மக்களும், ஏனைய மதங்களை சார்ந்த மக்களும் படுகொலை செய்யப்பட்ட அந்த கருப்பு வரலாற்றை எம்மால் ஒருபோதும் மறக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த புனிதமான உயிர்த்த ஞாயிறு நன்னாளிலே, எங்களுடைய இனத்தின் விடுதலைக்காகவும், மக்கள் படுகின்ற துயரங்களில் இருந்து அவர்கள் மீட்சி பெறவும் பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடைய மக்கள் செய்த தியாகங்கள், போராளிகள் செய்த ஈகங்கள் அத்தனையும் இந்த உயிர்த்த ஞாயிறு நன்னாளிலே நினைவுகூரப்பட வேண்டும்.

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த அந்த நாளைப் போலவே, எம் மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் நீங்கி, வடக்கு கிழக்கு எமது தாயக மண் விடுதலை பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

எம் மக்களின் அனைத்து துன்பங்களும் இந்த நாளிலே இறைவனின் ஆசியோடு முடிவுக்கு வர வேண்டும் என்று வேண்டி, உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு அன்று எமது கத்தோலிக்க மக்களும், ஏனைய மதங்களை சார்ந்த மக்களும் படுகொலை செய்யப்பட்ட அந்த கருப்பு வரலாற்றை எம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. கடந்த அரசாங்கமாக இருக்கட்டும் , தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கமாகட்டும், இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாகவும், சம்பந்தப்பட்ட வர்களைக் கைது செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தனர்.

தற்போதைய அரசை பொறுத்தவரையில், விசாரணைகளை மேற்கொள்கின்ற நிலை காணப்பட்டாலும், இதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்த குண்டு தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ஆன்மாக்களின் தியாகம் மகத்தானது. உயிர்த்த ஞாயிறு திருப்பலியில் தங்களை அர்ப்பணித்து, தங்கள் குடும்ப கஷ்டங்களை இயேசு பிரானிடம் முறையிட வந்த அந்த அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி கண்டிக்கத்தக்கது.

விசாரணை என்ற பெயரில் உண்மைகளை மூடி மறைக்கின்ற செயல்பாடுகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. புதிய அரசு இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது போலத் தெரிந்தாலும், இன்னும் அவை முழுமை பெறவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆகவே, உயிரிழந்த அந்த ஆன்மாக்களுக்காக இந்த அரசாங்கம் ஒரு நியாயமான தீர்ப்பை பெற்றுத்தர வேண்டும். உயிர்த்த ஞாயிறு என்பது மக்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகின்ற ஒரு தினமாக இருந்தாலும், வரலாற்று ரீதியாக எமது மக்கள் செய்த உயிர் தியாகங்களையும் நாம் நினைவு கூர வேண்டும்.

இந்த உயிர்த்த ஞாயிறு தினமானது, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப் படுகின்ற ஒரு நீதியான ஆண்டாக அமைய வேண்டும்.

தேவாலயங்களில் எமது மக்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகத் தாழ்மையுடனும், உறுதியுடனும் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றோம்.என மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0