உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் SMS தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாட்டில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணைய இணைப்புகள் (Links) குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்னர், அதன் இறுதிப் பகுதியை (Domain) நன்கு அவதானிக்க வேண்டும்.


குறிப்பாக .NET, .XYZ மற்றும் .CC போன்ற வழமைக்கு மாறான முனைகளைக் கொண்ட இணைய இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இணைய முகவரிகள் பெரும்பாலும் தனிநபர் தரவுகளைத் திருடுவதற்கும், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.


அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் இவ்வாறான செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0