உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்குறித்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்தாவது,இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர்.இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டுகின்றது.

உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் கலாசார பண்டிகையாகும்.

மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உறுதியான சங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதைத் தமது வாழ்வின் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

தமக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவுக்காக ஒன்றிணைந்து நின்ற மக்கள், உலகிற்கு ஒற்றுமையின் நற்செய்தியை வழங்கினர்.தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பகைமையை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் போருக்குப் பதிலாக, உலக மக்கள் அனைவரும் அமைதியையும் சகவாழ்வையுமே விரும்புகின்றனர்.இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.

துயருற்ற மக்களின் இரட்சிப்பிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் மரணத்தின் இருளைத் தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0