உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பணிப்புறக்கணிப்பு அடிப்படையற்றது – சுகாதார அமைச்சர் கடும் விமர்சனம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மருத்துவப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன நடைமுறைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு அடிப்படையற்றது என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற கருத்துரையில், எந்தவொரு பிரச்சினையும் இருந்தால் நோயாளிகளின் உயிரை பாதிக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுமாறு அவர் சங்கத்துக்கு அறிவுறுத்தினார்.


“நியாயமான காரணங்களுக்காகப் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றால் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் இது விவாதிக்கத்தக்கதல்லாத ஒரு நடவடிக்கை” என அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், அமைச்சருடன் உள்ள முரண்பாடுகளை பொதுமக்கள் மீது சுமத்தக் கூடாது என்றும், சட்டவிரோதம் என கருதினால் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.


இதனிடையே, பயிற்சி வைத்தியர்கள் அரச சேவையில் இணைவதற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை நீட்டிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.காலக்கெடு கடந்த பின்னர் விண்ணப்பிப்பவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பணியாற்றவோ அல்லது சம்பளம் பெறவோ வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0