இணைய நிதி மோசடி: 147 வெளிநாட்டினர் விளக்கமறியலில்.!
இணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 147 வெளிநாட்டினரை எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 133 சீனப் பிரஜைகள், 13 வியட்நாம் பிரஜைகள் மற்றும் ஒரு மலேசியப் பிரஜை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.