கிளிநொச்சி தர்மபுரத்தில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி.!
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இளைஞர்கள் இருவர், பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாகச் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சென்ற மோட்டார் கிரைண்டர் வகை வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 18 வயதுடைய தியாகராசா விக்கினேஸ்வரன் மற்றும் 19 வயதுடைய ஜெரின் கனிஸ்ரன் ஆகியோர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.