உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டீசல் விலை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் – பொருளாதார நிபுணர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

உலக சந்தை நிலவரத்தை முன்னிட்டு, ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஒரு லீற்றர் டீசல் 382 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில், உலக சந்தை விலைகளின் அடிப்படையில் அந்த விலையில் தொடர்ந்து விற்பனை செய்வது சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், டீசல் விலை உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், எனினும் சித்திரைப் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக விலை உயர்வு மேற்கொள்ளப்படாமல் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


புத்தாண்டிற்குப் பிறகு விலை உயர்வு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும்,விலை உயர்த்தப்படாவிட்டால் அரசாங்கம் மானியங்களை வழங்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், மானியங்கள் வழங்கப்பட்டால் அந்நிய செலாவணி கையிருப்புகளும் ரூபாயின் பெறுமதியும் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.டீசல் விலை உயர்வு மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தினாலும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டால் இது தவிர வேறு மாற்று வழி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0