உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலில்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாட்டை பாதிக்கும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் (04) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம், நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைக் காலத்தை 24 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை நேற்று (03) அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக பாதுக்கை, ஹோமகமை, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நீர் வெட்டுகள் அமுல்படுத்தப்படும்.

இதற்கு அமைவாக முதற்கட்டத்தின் கீழ், பாதுக்கை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் நேற்று பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.ஹோமாகமை பகுதியில் நேற்று (03) இரவு 8.00 மணி முதல் இன்று (04) பிற்பகல் 2.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பெலன்வத்தை பகுதியில் இன்று (04) இரவு 8.00 மணி முதல் நாளை அதாவது ஏப்ரல் 5 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுக்கை, ஹோமாகமை மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எவ்வாறெனினும், நீர்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்களில் தடையின்றி நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீர் விநியோகத் தடை தொடர்பான மேலதிக தகவல்களை 1939 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0