உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை வெளிப்படுத்தாவிட்டால் நடவடிக்கை – சானக பண்டார எச்சரிக்கை.!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் விசாரணைகளை முன்னெடுக்கும் ஷானி அபேசேகர பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பின் பிரதான செயலாளர் சானக பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீது நம்பிக்கை இல்லை என்றும், உண்மையான சூத்திரதாரி குறித்து அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியம் என்றும் சானக பண்டார குறிப்பிட்டார்.