உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

படு கொ*லைத் திட்டம் முறியடிப்பு: 109 துப்பாக்கி ரவைகளுடன் நான்கு பேர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய ‘கரந்தெனிய சுத்தா’வின் எதிரித் தரப்பு முக்கியஸ்தரை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ‘ராஜு’ எனப்படும் சனத் டி சில்வாவுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆரம்ப விசாரணைகளில், குறித்த நபர்கள் நீண்டகாலமாக இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுத்து வந்தமைவும், ஏற்கனவே பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.


மேலும், கைது செய்யப்பட்ட ஒருவரின் தகவலின் அடிப்படையில், மீட்டியாகொடை பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த 109 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் ரி-56 வகை 96 ரவைகளும், 9 மில்லிமீட்டர் வகை 13 ரவைகளும் அடங்குகின்றன.சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0