உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தி அவற்றை மறுசீரமைப்பதற்கான நிபுணர் குழு நியமனம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

நாம் எதிர்பார்க்கும் கல்வி மாற்றத்தை அடையத்தக்க ஆசிரியர்களை உருவாக்கும் சூழல் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

அரசாங்கம் எதிர்பார்க்கும் கல்வித்துறையின் மாற்ற இலக்குகளை அடைந்துகொள்ளக்கூடிய திறன்களையும் தலைமைத்துவப் பண்புகளையும் கொண்ட ஆசிரியர்களை உருவாக்கத்தக்க சூழல் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்காக நியமிக்கப்பட்ட புதிய நிபுணர் குழுவின் உறுப்பினர்களுடன் 2026.04.02 ஆம் திகதி இசுருபாய வில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைப் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள இக்குழுவில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள முகாமைத்துவத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அரோஷா அதிகாரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறைப் பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐங்கரன், இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஏ.டி. அனில் ஆகியோர் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் தேசிய கொள்கை அறிக்கையிலுள்ள கல்விக் கொள்கைக்கு இணங்க, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஒட்டுமொத்த நிறுவனக் கட்டமைப்பையும் உள்ளடக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் நலன்புரி சேவைகளை மேம்படுத்தல், அதன் நிர்வாக நடவடிக்கைகள், நிலைபேறுதன்மை, கற்றல் சூழல் மற்றும் மதிப்பீட்டு முறைமை, விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு போன்ற விடயங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது இக்குழுவின் பிரதான பணியாகும்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், பாடசாலைகளின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைத் தரமானதாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குவதில் தேசிய கல்வியியல் கல்லூரிகள் மிக முக்கியமான பணியைச் செய்கின்றன எனக் குறிப்பிட்டார். எனவே, எதிர்காலத்தில் உயர்ந்த தரத்திலான ஆசிரியர்களை உருவாக்கும் இடங்களாக இந்த நிறுவனங்களை மாற்றியமைப்பதற்கு, கல்லூரிகளின் முழுமையான நிறுவனக் கட்டமைப்பை உள்ளடக்கிய விரிவான மேற்பார்வைச் செயல்முறையை இந்த நிபுணர் குழு முன்னெடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது தொடர்பான நேரடிப் புரிதலைப் பெற்றுக்கொள்வதற்காகக் குழு உறுப்பினர்கள் அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளையும் நேரில் சென்று பார்வையிட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அந்தக்கண்காணிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் இதன்போது வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0