உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வேண்டுகோள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுவதன் காரணமாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பாடசாலையின் வெளிக்கள செயற்பாடுகள், விளையாட்டு நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை நிலவுகின்ற இந்த நாட்களில் பெற்றோர் தமது பிள்ளைகளை வெயிலில் அலையவிடாது உடல் இயக்க செயற்பாடுகளில் முடியுமானவரை தவிர்த்து அவர்களுக்கான நீர் ஆகாரம், ஓய்வினை வழங்குவதையும் அவர்களை சரியான முறையில் கண்காணிப்பதையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை நிலவுகின்ற காலகட்டத்தில் சிறுவர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணிகளை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த அதிகவெப்ப நிலை நிலவும் காலநிலையினை நாங்கள் பொருட்படுத்தாது அதிக உடல் இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது அது உயிருக்கே ஆபத்தாக முடிகின்ற நிலைமை காணப்படுகின்றது. பொதுமக்கள் மிகவும் அவதானமாக இந்த வெயில் காலநிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அதிக வெப்பநிலை நிலவுகின்ற ஒரு சில வாரங்களுக்கு மாணவர்களை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் விளையாட்டுப் போட்டிகள், மாணவர்கள் வெயிலில் செல்லும் வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு பிராந்திய சேவைகள் பணிப்பாளர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த காலகட்டம் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துகின்ற காலகட்டமோ, வெளிக்கள செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துகின்ற காலகட்டமோ இல்லை. மிகமுக்கியமாக இது ஒரு அபாயகரமான சூழ்நிலை. இந்த காலப்பகுதியில் மாணவர்கள் அதிக நீர் ஆகாரத்தினை அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் களைப்படையாது ஓய்வாக அவதானமாக கவனித்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு, முதியவர்களுக்கு இந்த காலநிலை ஆபத்தான நிலையினை ஏற்படுத்தும் என்பதனால் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0