உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முதலீட்டாளர்கள் எனும் போர்வையில் வெளியார் உள்நுழைவு; வடக்கின் கடலுக்கு ஆபத்து என்கிறது ஈ.பி.டி.பி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கடலட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்படுகின்றபோது, அவற்றின் உரிமையாளர்களாகவும், பயனாளர்களாகவும் அந்தப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற இன்றைய (03) ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த, கட்சியின் ஊடகச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலங்களில், முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையிலோ, ஏற்றுமதியாளார்கள் என்ற போர்வையிலோ, எங்களுடைய வளங்களும் எங்களுடைய வருமானங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற சூழல் உருவாகக்கூடாது என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

எமது கட்சியின் இந்த நிலைப்பாட்டை பிரதேசவாதமாகவோ, இனவாதமாகவோ, தேசியவாதமாகவோ யாரும் கருதக் கூடாது எனவும், கடந்த பல தசாப்தங்களாக அழிவுகளையும் அவலங்களையும் சுமந்து, ஏனையவர்களோடு ஒப்பிடுகின்றபோது பின்தள்ளி இருக்கின்ற எமது மக்களின் எதிர்காலம் சுபீட்சமடைய வேண்டும்.

அதற்கு எமது பிரதேசங்கிளில் இருக்கின்ற வளங்களை உச்சபட்சம் நாங்களே பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடாகவே அனைவரும் அணுக வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

“கடலட்டை பண்ணைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

எமது பிரதேசத்திற்கு அந்நிய செலாணியை பெற்றுக் கொள்ளும் வகையில் எமது செயலாளர் நாயகத்தின் தீர்க்க
தரிசனத்துடன், விஸ்தரிக்கப்பட்ட கடலட்டை உற்பத்தி பாரிய வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே, தற்போயை அரசாங்கமும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது, பல்வேறு பரிமாணங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இல்லாதுவிடின், எமது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

குறிப்பாக முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையில், தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் போன்ற வெளியார் உள்வாங்கப்பட்டால், வருமானத்தின் பெரும் பகுதி எடுத்துச் செல்லப்பட்டு விடும் எமது மக்களுக்கு போதிய பலன் கிடைக்காது.

அதேபோன்று, பூகோள அரசியல் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடிய அபாயம் இருக்கின்றது.

எனவே, தற்போயை முயற்சிகளிலும் இந்தப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0