சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மடக்கிப் பிடிப்பு.!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் அப்பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 03.04.2026 அன்று அதிகாலை 3.00 மணியளவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் சிறப்பு அதிரடிப்படையினாரல் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு டிப்பர் சாரதிகளை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.


